முடிவுகளை தேவைக்கேற்ப மாற்றுக்கொள்ளும் நிலைப்பாடு எமக்கில்லை – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!
Friday, August 9th, 2024
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தான் எமது கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என நாம் வெளிப்படையாக அறிவித்தள்ளோம். அதற்கிணங்கவே எமது கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் அமையும் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் முடிவுகளை தேவைக்கேற்ப மாற்றுக்கொள்ளும் நிலைப்பாடு எமக்கில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (09.08.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது நடைபேறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நாமல் ராஜபக்ச களமிறங்கியுள்ளதால் தங்களது கட்சியின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
நாம் யாரதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அடிபணிந்து, சுயநலத்துக்காக ஆதரவு வழங்கியது கிடையாது. குறிப்பாக. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துவமான செயற்பாட்டைக் கொண்ட கட்சியாகும்
“மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற அரசியல் இலக்குடன் இணக்க அரசியலினூடாக டக்ளஸ் தேவானந்தா 30 ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக நாடாளுமன்றில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு அங்கம் வகித்துவருகின்றார்.
இதில் ஜனாதிபதிகளாக சந்திரிகா அம்மையார், மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்க என குறித்த ஜனாதிபதிகளின் கீழ’ அமைந்த ஆட்சிக்காலங்களில் அமைச்சராகவே இருந்திரக்கின்றார்.. இவர்களுக்கான ஆதரவை அன்றைய சூழலுக்கேற்ற வகையில் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே நாம் மேற்கொண்டிருந்தோம்.
இதேநேரம் தமிழ் மக்களின் அன்றாடப்பிரச்சினை அபிவிருத்தி அரசியலுரிமை ஆகியவற்றை நோக்காகக் கொண்டு ஈ.பிடி.பி தனித்துவமான முடிவுகளை மக்கள் நலன்சார்ந்து தேர்ந்தெடுத்து தனது அரசியல் வழிகாட்டல்களை மக்களுக்கு வழங்கிவருகின்றது
இத்தேர்தலில் தென்னிலங்கையை சேர்ந்த பல ஜனாதிபதி வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டியிடுகின்றனர். இதில் தாங்கள் குறிப்பிட்ட வேட்பாளரும் உள்ளடங்கும். ஆனால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிப்பதில் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.
எனவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் மக்களின் நலன்சார்ந்து முடிவுகளை எடுக்குமே தவிர எவரது விருப்பு வெறுப்புகளுக்காகவும்’ தன்னை மாற்றிக்கொண்டு செயற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


