முடக்கப்பட்டது புங்குடுதீவு !

Wednesday, October 7th, 2020


யாழ்ப்பாணம் புங்கடுதீவுப் பகுதி மக்கள் வெளியேறாதவாறு முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் வசிக்கும் மேலும் 385 இற்கும் மேற்பட்டோர் இன்று சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.
நேற்றுமுன்தினம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 945இற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.
புங்குடுதீவுப் பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனினும், புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து யாரும் வெளியேறாதவாறும் அப்பிரதேசத்துக்குள் யாரும் செல்லாதவாறும் முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நெடுந்தீவு , நயினாதீவு மற்றும் ஏனைய தீவுகளுக்கான படகுப் போக்குவரத்துச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றன.
காலை ஒரு சேவையும் மாலையில் ஒரு சேவையும் இடம்பெறுகின்றது. குறித்த சேவைக்கிணங்க யாழ்ப்பாணத்திற்கான பேருந்து சேவையும் இடம்பெறுகின்றது. குறிப்பாக தீவுப் பகுதிக்குள் தீவக முகவரி அடையாள அட்டையுடையவர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்
அத்தோடு, குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி கடந்த 30ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சென்ற பெண் கலந்துகொண்ட பிறந்தநாள் நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றும் 380இற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: