முகநூல் தொடர்பில் 850 முறைப்பாடுகள்!
Saturday, April 29th, 2017
இவ் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் பயன்பாடு தொடா்பில் 850 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முகநூல் தொடர்பிலான முறைப்பாடுகளில் 60 வீதமானவை பெண்களினால் செய்யப்பட்டுள்ளதாக பிரிவின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
போலியான கணக்குகளை தயாரித்தல், முகநூலில் படங்களை தரவிறக்கி வேறும் தேவைகளுக்கு பயன்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் முகநூல் தொடர்பில் 2200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முகநூல் பயன்பாடு தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 0112-691692 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தமிழ் மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய இயக்கங்கள் மீண்டும் ஐக்கியத்துடன் நீதி கோரி யாழ் நகர...
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று!
காலிமுகத்திடல் போராட்டம் – வகிபாகம் செய்த மூன்றாம் தரப்பு தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் ...
|
|
|


