மீள்குடியேற்றம் தொடர்பான பதிவுகள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் ஆரம்பம்

Saturday, February 3rd, 2018

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்படாத பகுதிகளில் எதிர்காலத்தில் காணிகள் கையளிக்கப்படும் போது மீள்குடியேற்ற செயற்பாடுகளை இலகுபடுத்தும் பொருட்டு மீள்குடியேற்றம் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் இதுவரை மீள்குடியேற்றம் செய்வதற்குப் பதிவுகள் மேற்கொள்ளத் தவறியவர்கள் 28.02.2018 ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிவுகளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என பிரதேச செயலாளர் ப.ஜெயராணி அறிவித்துள்ளார்.

Related posts: