மீன்பிடித்துறையில் முன்னேற்றம் – அமைச்சர் மஹிந்த அமரவீர!
Sunday, September 10th, 2017
இலங்கை மீன்பிடித்துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை மீன்பிடி திணைக்களத்தின் 106ஆவது விற்பனைக்கூடம் அண்மையில் ராகம நகரில் திறந்து வைக்கப்பட்டபொழுது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மேலும் அமைச்சர் தெரிவிக்கையில் ,
இதற்கமைவாக மீன்பிடி உற்பத்தி செயல்பாடுகளை மேம்படுத்த மீன்பிடித்துறை அமைச்சு விசேடத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.எதிர்காலத்தில் புதிய திட்டத்திற்கு அமைய, மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மீன் பதப்படுத்தல் உள்ளிட்ட உள்ளார்ந்த செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு தனியார் துறையினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
சமகால அரசியல் நீரோட்டத்திற்கு ஏற்ப மாறுதல்களும் ஏற்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிரவாக ச...
உள்ளூர் விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வலியுறுத்து!
தொடர்ச்சியான மழை வீழ்ச்சி - பெரும்போக விவசாயிகள் பெருமகிழ்ச்சி!
|
|
|


