மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
Friday, August 24th, 2018
நாளை முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கவுள்ளதாக வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளதாக குறித்த குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய 12.5Kg சமையல் எரிவாயுவின் விலையினை 158 ரூபாவினால் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சமையல் எரிவாயுவின் புதிய விலையானது 1696 ரூபாவாக அறிவிக்கப்படவுள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பினை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு நிறுவனங்கள் விலை அதிகரிப்பிற்கு கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் சமையல் எரிவாயுக் கொள்கலன் ஒன்று 245 ரூபாவால் அதிகரித்து கடந்த ஜூன் மாதம் 138 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
Related posts:
சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முகக்கவசங்கள் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் – சுகாதார தரப்ப...
இரண்டு மாதங்களில் சினோபெக் நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் - மின்சக்தி மற்றும் வலுசக்தி இ...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சினமன் எயார் விமான சேவை ஆரம்பம் !
|
|
|


