மீண்டும் கியூ.ஆர்.குறியீட்டின் அடிப்படையிலான வாராந்த எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜயசேகார அறிவிப்பு!

இந்த மாதம் மீண்டும் கியூ.ஆர்.குறியீட்டின் அடிப்படையிலான வாராந்த எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகார தெரிவித்துள்ளார்.
ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை. இது தொடர்பாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இம்மாதம் ஒதுக்கம் அதிகரிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒதுக்கத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போதும், நாட்டில் சீராக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சவால்களால் அந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தமாதம் முதல் கியூ.ஆர். முறைமையை நீக்குவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் எனினும் அது குறித்த முடிவு எதனையும் இன்னும் எடுக்கவில்லை என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது - கல்வி அமைச்சர்!
பொதுமக்களின் கவனக்குறைவும் பொறுப்பின்மையுமே கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் - பொது சுகாதார பரிசோதகர்...
நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத் வருடாந்த திருவிழா தொடர்கில் விசேட கலந்துரையாடல் !
|
|