மீண்டும் ஐந்து நாள் போராட்டம் – எச்சக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்!

Saturday, September 28th, 2019

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மேற்கொண்ட இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிழறவழடந்த நிலையில் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தாம் தயாராவதாக இலங்கை அசிரியர் சங்கம் எச்ரித்துள்ளது..

எனினும் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் ஒக்டோபர்  5ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாட்களில் தாம் மேற்கொண்ட போராட்டத்தின் போது எந்த ஒரு அதிகாரம் மிக்கவர்களும் உரிய தீர்வுகளை அறிவிக்கவில்லை.

எனவே ஒக்டோபர் 5ம் திகதியன்று ஐந்து நாட்களுக்கான போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமது போராட்டம் குறித்து ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து பேச முயற்சிக்கப்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts:


கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மக்கள்!
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கம் அங்குரார்ப்பணம்!
ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகளில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி - விவசாய அமைச்சு தெரிவி...