மிலேனியம் சலஞ்சஸ் கோப்பரசனின் உடன்படிக்கைகத் திட்டத்தில் இலங்கையும் தெரிவு!
Monday, December 19th, 2016
அமெரிக்காவின் மிலேனியம் சலஞ்சஸ் கோப்பரேசனின்(Millennium Challenge Corporation) ஐந்து வருட நன்கொடை உடன்படிக்கைகத் திட்டத்திற்கு இலங்கையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பணிப்பாளர் சபையின் காலாண்டுக் கூட்டம் கடந்த 13 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தின்போது இலங்கை புர்க்கினா பாசோ மற்றும்ருனீயா ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இநத நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் வறுமையை ஒழிப்பதற்காக மிலேனியம் சலஞ்சஸ் கோப்ப ரேசனின் (Millennium Challenge Corporation) ஐந்து வருட நன்கொடையின் கீழ் நிதி உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளன.
இது தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஸப் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை மக்களுடனான எமது ஆறு தசாப்த காலநல்லுறவுக்கு மத்தியில் இந்த திட்டத்தின் கீழ் உதவுவதற்கு நாம் முன்வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக இந்த திட்டத்தில் இலங்கையையும் உள்ளடக்கியுள்ளோம்.
இந்த திட்டத்திற்கான புள்ளிப் பட்டியலில் மூன்றாம் தரப்பு கொள்கை குறிகாட்டிகளின் கீழ் நாடு ஒன்று நீதியான மற்றும் ஜனநாயக ஆட்சிமுறை தமது மக்கள்நலணை முன்னிலைப்படுத்திய முதலீடுகள், பொருளாதார சுதந்திரம் என்பனவற்றுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இந்த அளவீட்டுக்கு அமைவாக அடிப்படையில் இலங்கையும் இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related posts:
|
|
|


