மியன்மாரிலிருந்து ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி – வர்த்தக அமைச்சு தீர்மானம்!

சந்தையில் ஏற்பட்டுள்ள அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக மியன்மாரிலிருந்து ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி ,ஒரு மெட்ரிக் தொன் அரிசியை 445 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினூடாக இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி ,ஒரே நேரத்தில் 20,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்து அவ்வப்போது சந்தைக்கு விநியோகிக்க வர்த்தக அமைச்சு எதிர்பார்க்கிறது.
மேலும் ,அரிசி இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலாவணியை மக்கள் வங்கிக்கு வழங்குமாறு வர்த்தக அமைச்சு மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சயிடம் குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு!
சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – தவறான பரப்புரை என அமைச்சர் ...
அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை – கிளிநொச்சியில் வீதி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கை நடைமுறையில்!
|
|