மின் வெட்டு ஏற்படாது – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!
Wednesday, January 12th, 2022
இன்று மின் வெட்டு ஏற்படாது என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் பழுதடைந்த மின் பிறப்பாக்கி பழுதுபார்க்கப்பட்டுள்ளதால் இன்று மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னதாக நாட்டின் சில பகுதிகளில் இன்று (12) முதல் மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே சற்று முன்னர் பழுதடைந்த இயந்திரம் சரி செய்யப்பட்டுள்ளதால் மின்சாரம் தடைப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
செல்வந்த நாடுகளில் பின்பற்றப்படும் முறைமையை இலங்கையில் அமுல்படுத்த முடியாது - பிரதமர் மஹிந்த சுட்டி...
நாளையும் 200 நிமிடங்கள் மின்வெட்டு - பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!
விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல் - தீர்வைப் பெற்றுத் தருவதாக மாவட்ட அபிவிர...
|
|
|


