மின் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களிடம் யோசனை – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை!
Tuesday, January 17th, 2023
இலங்கை மின்சார சபையினால் திட்டமிடப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனைகளை இன்று முதல் எதிர்வரும் 21 நாட்களுக்குள் முன்வைக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது.
இந்த வருடத்திற்காக 66.2 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை ஆராய்ந்து அண்மையில் அமைச்சரவை யோசனை முன்வைத்திருந்தது.
அந்த கட்டண திருத்தம் தொடர்பில் பிரச்சினைகள் அல்லது எதிர்ப்புகள் இருக்குமாயின் எழுத்துமூலம் அறியப்படுத்துமாறு அந்த ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
பின்னர், அந்த அறிவிப்புக்கள் ஆராயப்பட்டு அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தவணைப் பரீட்சை நேர அட்டவணை பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பு!
தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு இலங்கையில் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்ப...
புதிய மதுவரி சட்டமூலத்தை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம் - மதுவரி திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


