மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் ஒரு மணித்தியாலத்தால் குறைப்பு – பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, April 18th, 2022

நாட்டில் இன்று திங்கட்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று 3 மணிநேரமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.

இந்தநிலையிலேயே மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், A முதல் L வரையான மற்றும் P முதல்  W வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாடாளுமன்றில் கடதாசி பாவனையை குறைக்க நடவடிக்கை - ஜனவரி முதல் நடைமுறையாகும் என சுற்றாடல் அமைச்சர் மஹி...
மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நேரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுமாயின், அது தொடர்பில் நடவடிக்கை எ...
தினமும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தொடருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்கின்றனர் – நடவ...