மின்தடை குறித்து ஆராய ஜேர்மன் நிபுணர்கள் இலங்கை வருகை!

Monday, March 21st, 2016

இண்மையில் இரு உபமின் நிலையங்களில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் குறித்து கண்டறிவதற்காக ஜேர்மனைச் சேர்ந்த நிபுணர்கள் குளு இன்று (21), இலங்கை வரவுள்ளனர்.

கொட்டுகொட உபமின் நிலையம் மற்றும் பியகம மின் விநியோக நிலையம் ஆகியவற்றில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் குறித்து மேற்படி நிபுணர்கள் ஆராயவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு மின்நிலையங்களுக்கும் தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், உப மின் நிலையங்கள் காணப்படும் இடங்கள் மற்றும் அவற்றுக்குத் தேவையான பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணமொன்று பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் 55 உப மின் நிலையங்கள் காணப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்ட மின் தடையை அடுத்து, அனல் மின்நிலையங்களை உயிர்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சு தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: