மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர அரச துறையில் எந்தவொரு வேலைக்கும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
Sunday, October 8th, 2023
எதிர்காலத்தில் மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர அரச துறையில் எந்தவொரு வேலைக்கும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அரச சேவையானது அரசாங்கத்திற்கு தாங்க முடியாத பிரச்சினையாக மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
15 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். மக்கள் தொகையில் சராசரியாக 12 பேருக்கு ஒரு அரச ஊழியர் உள்ளனர்.
இது உலகின் மிக உயர்ந்த அரச ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும். எனவே இது பெரிய சுமை இனி அதை செய்ய முடியாது. என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
400 கிராம் பால்மாவின் நிர்ணய விலை 295 ரூபா!
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விஷேட பேருந்து சேவை!
இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி - தேசிய மருந்துகள்...
|
|
|


