மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுங்கள் – ,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோரிக்கை!

Tuesday, March 14th, 2023

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுக்குமாறு, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலை காலை உணவு தொடர்பில், ஆராய்வதற்காக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உடன் மட்டக்குளி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.

கொவிட்- 19 தொற்று காரணமாக பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்தன.

சர்வதேச ரீதியில் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளன. உலக நாடுகள் பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டே செயற்படுகின்றன.

அத்துடன், தனியார் சர்வதேச பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், தொழிற்சங்க போராட்டம் காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் எதிர்காலமே பாதிக்கப்படுகின்றது.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தாமதமாவதால் திட்டமிட்டவாறு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையையும் நடத்த முடியாமல் போகும்.

மேலும் காலதாமதமானால் அது ஏனைய பரீட்சைகளையும் பாதிக்கும். இதனால் மாணவர்களின் எதிர்காலமும், அவர்களது கல்வி உரிமையும் பாதிக்கப்படும். விடைத்தாள் மதிப்பீட்டாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்படுகிறது.

மதிப்பீட்டு பணிகளுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை இரட்டிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

எனவே 40 இலட்சம் பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவார்கள் என தாம் நம்புவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஒரு சமூகத்தின் கல்வியறிவின் கணிப்பீடாக இருப்பது வாசிப்பு நிலையே – தேசிய வாசிப்பு நிகழ்வில் வேலணை பிர...
கொரோனாவை முழுமையாக ஒழிப்பேன்- அரசியல் இனம் மதம் என்ற பேதங்கள் கிடையாது - பிரதமர் மஹிந்த விசேட உர...
இலங்கை அருகே வளிமண்டலத் தளம்பல் - நாட்டின் பல பாகங்களில் சில தினங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு என...