மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு! .
Wednesday, June 26th, 2024
மாங்குளம் – பனிச்சங்குளம் பகுதியில் நேற்றிரவு (25) ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றின் மீது பாரவூர்தியொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் மீது பின்னால் பயணித்த பாரவூர்தி மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் சம்பவத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜப்பானிய செல் உயிரியல் ஆராய்ச்சியாளருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு!
வடமாகாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு தொடரும் எச்சரிக்கை!
சிறந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் - கல்வி அம...
|
|
|


