மாகாண மந்திரி டெனீஸ்வரனை வாகனத்தில் கட்டி ஈ.பி.டி.பியிடம் இழுத்துச் சென்ற இ.போ.ச ஊழியர்கள்!

Friday, February 3rd, 2017

தமது போராட்டத்தையும் கோரிக்கையையும் இழிவுபடுத்திய வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சரை டெனீஸ்வரனது உருவப்பொம்மையை எரித்து வடக்கு மாகாண  இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்

வவுனியாவில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் பயணிகள் சேவை ஆரம்பிப்பது தொடர்பில் நேற்றையதினம் இ.போ.ச சாரதிக்கும்-தனியார் சாரதிக்கும் இடையே   ஏற்பட்ட கருத்து முரண்பாடு  கைகலப்பாக மாறியதில் இ.போ.ச. சாரதி படு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பிரச்சினைகளுக்கு காரணமான வவுனியா பஸ்தரிப்பு நிலையம் தமது போக்குவரத்து சபையிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும், தமது ஊழியர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான போருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டமை போன்ற விடயங்களை முன்னிறுத்தியே குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இன்று காலை யாழ். கோண்டாவில் போக்குவரத்து சாலை அலுவலகத்தில் ஒன்று கூடிய ஊழியர்கள்  டெனீஸ்வரனது உருவப்பொம்மை வீதியோரத்தில் கட்டி தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளுடன் குறித்த உருவப்பொம்மையை ஊர்தியில் கட்டி பலாலி வீதியூடாக ஊர்வலமாக கொண்டுசென்று ஸ்ரான்லி வீதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மகஜர் ஒன்றையும் கையளித்ததுடன் தமது பிரச்சினைகள் தொடர்பாகவும் தெரிவித்தனர்.

ஊழியர்களது கோரிக்கை அடங்கிய மகஜரை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பாக பெற்றுக்கொண்ட கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சிவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) உள்ளடங்கிய முக்கியஸ்தர்கள் குறித்த பிரச்சினை தொடர்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

தொலைபேசியூடாக போராட்டக்காரர்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனநாயக ரீதியில் அமைதியான வழியில் போராட்டங்களை நடத்துமாறு தெரிவித்ததுடன் குறித்த பிரச்சினை தொடர்பாக துறைசார்ந்தவர்களுடன் பேசி தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

unnamed

unnamed (1)

4

3

2

1

5

Related posts: