மாகாண எல்லைகளை தாண்டும் பயணிக்கும் பயணிகளிடம் சேவை அடையாள அட்டை சோதனை நடத்தப்படும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

நாடு முழுவதும் உத்தியோகபூர்வ கடமைகளுக்காக மாகாண எல்லைகளைக் கடக்கும் பயணிகளிடையே சேவை அடையாள அட்டை தொடர்பில் இன்றுமுதல் பொலிஸாரினால் கண்காணிக்கப்பட்டுவருவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
நடத்துனர் அல்லது ஓட்டுநரால் அடையாள அட்டையைப் பரிசோதிப்பது நடைமுறையில் இல்லாததால் மேற்படி நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் அசாதாரண கொவிட் -19 தொற்றுச் சூழலில் பொதுப் போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
இந்தச் சோதனை நடவடிக்கையானது மாகாண எல்லைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்படும். மேலும் மாகாணத்துக்குள் பயணம் செய்வோருக்கு இது பொருந்தாது எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முதலாம் திகதி முதல் பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு!
சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை !
டெங்கு நோயினால் 52 பேர் உயிரிழப்பு!
|
|