மலேரியாவை முற்றாக ஒழித்துள்ள நாடு இலங்கை!
Friday, August 12th, 2016
இலங்கை மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான உத்தியோகப்பூர்வ சான்றிதழானது உலக சுகாதார அமைப்பினால் அடுத்த மாதம் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள மாநாட்டின் போது சான்றிதழ் கையளிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பல வருடங்களாக உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்குள் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த மாதம் இலங்கை யானைக்கால் நோயினை முற்றாக ஒழித்த நாடாக சுகாதார அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாட எதிர்வரும் வியாழன் கூடுகின்றது அரசியலமைப்பு பேரவை!
மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது - வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில்...
ஏப்ரல் 21 தாக்குதல் - அதிகாரிகள் செயற்பட்ட விதம் குறித்து ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசே...
|
|
|


