மறைந்த பாடகர் சாந்தனின் இல்லத்திற்கு ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென்று ஆறுதல்!
Thursday, March 2nd, 2017
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிரன்று காலமான ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் இல்லத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள் சென்று அறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை. தவநாதன் அவர்களது தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள் பாடகர் சாந்தனின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டிருந்த நிலையில், நேற்றையதினமும் கட்சியின் உயர்மட்ட முக்கியஸ்தர்களும் கட்சியின் பிரதேச நிர்வாக செயலாளர்களும் சென்று அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டனர்.



Related posts:
இன்று முதல் புதிய மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் அறிமுகம்!
இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் ஆதரவு தொடரும் - சீன தூதுவர் அறிவிப்பு!
சமுதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் செயற்பாட்டில் தோற்றுப்போனால் சமுதாயம் தோற்றுப்போவதாக அர்த்தம் - ய...
|
|
|


