மருந்துப் பொருட்களை சேமிக்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு!
Friday, February 16th, 2018
ஆறு மாத காலத்திற்கு சுகாதார சேவைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்களை சேமித்து வைக்குமாறு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர்டொக்டர் ராஜித சேனாரத்ன அதிகாரிகளுக்கு உரத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மருந்துப் பொருட்களை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ மனைப் பணிப்பாளர்கள்மருந்து விநியோக உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி மருந்துத் தட்டுப்பாடு இடம்பெறாதிருப்பதை உறுதி செய்யுமாறு சுகாதார அமைச்சர் ஆலோசனைவழங்கியுள்ளார்.
அண்மையில் மருந்து விநியோகத்தை சீராக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதில் சர்வதேச மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்து வகைகளைஇலங்கைக்கு இறக்குமதி செய்வதற்காக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பிரத்தியேக பிரிவை ஸ்தாபிக்குமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


