மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவினால் அறிவிக்கவும் – சுகாதார அமைச்சு!

சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் விபரங்களை பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் அண்மைக்காலமாக இன்புளுவென்சா மற்றும், டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இதுபோன்ற நோய்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கையும் கடந்த காலங்களில் பன் மடங்காக உயர்ந்துள்ளது.
ஆகவே நாட்டில் இவ்வாறான நோய்களுக்கு மருந்து தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளமையினால், சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து விபரங்கள் தொடர்பிலும், பற்றாக்குறையாக காணப்படும் மருந்துகள் தொடர்பிலும் உடனடியாக தெரிவிக்குமாறும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
அரச சேவையில் பட்டதாரிகள்!
ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணி ஊருவாக்கம் – வெளியாகியன விசேட வர்...
வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் வீட்டுப் பணிப்பெண்களின் ஆகக்குறைந்த வயதெல்லையில் திருத்தம்!
|
|