மருந்துகளின் விலைகளைக் குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Thursday, June 21st, 2018

புற்று நோய் நோயாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் அதிக விலையுடைய மருந்துகளின் விலைகளை எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்ட நடவடிக்கையின் கீழ் 48 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, இரண்டாம் கட்ட நடவடிக்கையாக அதிக விலையுடைய மருந்துகளின் விலைகளை குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

மருந்துகளின் விலை குறைக்கப்பட்ட பின்னர், தனியார் மருத்துவமனைகளில் விலை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


வடமாகாண விவசாய பயிற்சி நிலையத்தில் பருவகால தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு ஈ.பி.டிபி யி...
சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வி முறையை மாற்ற வேண்டிய நேரம் இது - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜய...
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களை நடத்தவும் - பிரதமரிடம் ஆணைக்குழு அதிகாரிகள் பரிந்துரை!