மருத்துவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு அடுத்தவாரம்!
Thursday, October 25th, 2018
வடமாகாண மருத்துவர்களின் மேலதிக கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படுமென மருத்துவர் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் த.காண்டீபன் தெரிவித்தார்.
மருத்துவர்களின் மேலதிக கொடுப்பனவு நிதி அமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பணிப்பாளர் வைத்திய கலாநிதி யு.கேதீஸ்வரனால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்களின் மேலதிக கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை மேலதிக கொடுப்பனவை வழங்குமாறு கோரி இரு தினங்களுக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை - பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!
நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு!
பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது - ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!
|
|
|


