மருத்துவமனைகளிலுள்ள பிராணவாயுவின் அளவு குறித்து நாளாந்த கண்காணிப்பு – உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் பணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்படும் பிராணவாயுவின் அளவு தொடர்பில் நாளாந்தம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டின் நாளாந்த பிராணவாயு உற்பத்தி 80 தொன் ஆகும். எனினும் தற்போது அந்த உற்பத்திக் கொள்ளளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா பரவலுக்கு முன்னர் நாட்டில் நாளாந்த பிராணவாயு தேவைப்பாடு 20 முதல் 25 தொன் வரை இருந்தது.
இந்நிலையில், பிராணவாயு தேவைப்படும் அனைத்து நோயளர்களுக்கும் அவசியமான பிராணவாயுவினை பற்றாக்குறையின்றி வழங்குவதற்கு எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
Related posts:
இவற்றை மீறினால் 25,000 அபராதம்!
உடல் உறுப்பு தானம் செய்வதை மக்கள் விரும்பவேண்டும் - இருதய சத்திர சிகிச்சை நிபுணர் ஞானதாசன்
காரைநகர் கசூரினா கடற்கரைக்காக பயன்பாட்டு வரி ஈ.பி.டி.பியின் முயற்சியால் 50 வீதத்தினால் குறைப்பு!
|
|