மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையில் 21 பேர் அனுமதி!
Tuesday, October 20th, 2020
மருதங்கேணி கொரோனா மருத்துவமனையில் 21 கொரோனா நோயாளிகள் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா நோயாளிகள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் வடக்கில் யாழ்ப்பாணம் மருதங்கேணியிலும், கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியிலும் கொரோனா மருத்துவமனைகள் சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருதங்கேணி மருத்துவமனை நேற்றய தினம் திறந்துவைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு பின்னர் 21 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமைச்சரவை அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது - விஜேதாச!
பயங்கரவாதத்திற்கு எதிராக சார்க் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!
|
|
|


