மரக்கறிகளின் விலை வீழ்ச்சியால் செய்கையாளர்கள் பெரும் பாதிப்பு!

Thursday, March 1st, 2018

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மரக்கறி விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக கத்தரி,தக்காளி ,கரட் ,கோவா பூசணி,உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலை திடீரென சரிந்துள்ளது மரக்கறிகள் யாவும் விலை அறுபது ரூபாவிற்கு உட்பட்ட விலையிலேயே விற்கப்படுகின்றன.

அதனைவிடவும்      பச்சை மிளகாய் கிலோ ஜம்பது ரூபாவாகவும் சின்ன வெங்காயம் கிலோ 120 ரூபாவுக்கும் மேல் விற்கப்படுகின்றன. திருநெல்வேலி, சுன்னாகம் ,சங்கானை, சாவகச்சேரி, கொடிகாமம், சந்தைகளுக்கு தாராளமாக மரக்கறி வகைகள் வந்து சேர்கின்றன.

எனினும் போதிய சந்தை வாய்ப்பின்றி காணப்படுவதால் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாசி மாதம் ஆகையால் சுபகாரியங்கள்,பெருந் திருவிழாக்கள் என்பவற்றுக்கு உகந்த நாட்கள் இன்மையால் மரக்கறி பாவனை குறைந்துள்ளது எனவும் சந்தை வாய்ப்புக்கள் குறைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. பங்குனி மாதம் பிறந்தால் மரக்கறி வகைகளின் விலை உயரும் பங்குனித் திங்கள் மற்றும் சுப வைபவங்கள் ஆலயத் திருவிழாக்கள் ஆரம்பிக்கும் மாதம் ஆகையால் மரக்கறிப் பாவனையும் அதிகரிக்கும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts: