மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவிலான மரக்கறி வகைகள் கிடைப்பதனால், மரக்கறிகளின் விலைகள் 60 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கறிமிளகாய் கிலோ ஒன்றின் விலை 60 முதல் 65 ரூபா வரையிலும், கத்தரிக்காய் கிலோ ஒன்றின் விலை 30 முதல் 35 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், பூசனிக்காய் கிலோ ஒன்றின் விலை 10 முதல் 12 ரூபாய் வரையும், பீட்ரூட் கிலோ ஒன்றின் விலை 20 முதல் 25 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
இலங்கையில் இனிமேல் யுத்தம் ஏற்படாது - யாழ். கட்டளைத் தளபதி
டெங்கு நோயினால் 269 பேர் உயிரிழப்பு!
பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 858 பெண்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!
|
|