மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை இராணுவத்தினரால் விடுவிப்பு!

Tuesday, January 30th, 2018

இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

வலிவடக்கில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னதான இடப்பெயர்வின் போது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது.

பின்னர் குறித்த வைத்தியசாலையை இராணுவத்தினர் தமது உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த வைத்தியசாலையானது கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள காரணத்தினால் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்து சிறந்த முறையில் சிகிச்சை பெறுவதற்குரிய சரியான இடம் இந்த வைத்தியசாலை என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு இந்த வைத்தியசாலை விடுவிக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியான கோரிக்கைகள் பாதுகாப்பு தரப்பிடம் முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்புடைய குறித்த வைத்தியசாலை உத்தியோக பூர்வமாக இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் ஆகியோரிடம் அதற்குரிய பத்திரங்களை கையளித்துள்ளனர்.

Related posts:

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டி வட்டார நிர்வாக செயலாளர் கதிரவேற்பிள்ளை அரியரட்ணம் வீதி விபத்த...
விலங்குகளின் கேட்டல் உறுப்புகளை பட்டாசு பாதிக்கலாம் - கவனத்தில் கொள்ளுமாறு சுற்றாடல் ஆர்வலர்கள் கோரி...
பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை - கல்வி அமைச்சு அதிரடி தீர்மானம்!