மயிலிட்டி ஆலயங்களில் ஞாயிறன்று விசேட பூஜைகள் !
Tuesday, June 14th, 2016
உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வீர மாணிக்கத் தேவன் துறை ஸ்ரீ கண்ணகா தேவி, முருகன், குளத்தடி அம்மன் ஆலயங்களில் எதிர்வரும்-19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜைகள் இடம்பெறவுள்ளன.
வழமை போன்று பாதுகாப்புப் படையினரின் அனுமதி பெற்று இந்த விசேட பூஜைகள் நடாத்தப்படவுள்ளதால் சகல அடியவர்களையும் ஞாயிற்றுக் கிழமை காலை-7 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மையில் ஒன்று கூடுமாறு ஆலய நிர்வாக சபையினர் கேட்டுள்ளனர். பருத்தித் துறையிலிருந்து வருகை தரும் பக்தர்களின் வசதி கருதி போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related posts:
அனைத்து மாவட்டங்களிலும் நீச்சல் தடாகம் அமைக்கப்படும் - அமைச்சர் தயாசிறி ஜயசேகர!
நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரியை குறைக்கிறது சீனா !
விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 22ஆம் திகதி!
|
|
|


