மன்னார் மாவட்டத்திற்கு வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பாஸ் வழங்கப்படாது- அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

ஏனைய மாவட்டங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வருகின்ற எவருக்கும் பாஸ் வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மேகன்றாஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரிகள்,பொது சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளோம்.
இதன் போது பாஸ் நடைமுறையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. தற்போது அனைவரும் பாஸ் நடைமுறையை பின்பற்றுகின்றனர்.வைத்திய சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளுகின்றனர். இதனால் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கலந்து கொண்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு தரப்பினரினால் வழங்கப்படுகின்ற பாஸ் நடைமுறையினால் குறித்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் யார் பாஸ் வழங்கினாலும் இறுதியில் பிரதேச செயலாளர்களின் சிபாரிசு இருக்கின்ற பாஸிற்கு மாத்திரமே வைத்தியசான்றிதழ் வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும் தெற்கில் இருந்தும்,ஏனைய மாவட்டங்களில் இருந்தும் வருகின்ற எவருக்கும்எமது மாவட்டத்தில் பாஸ் வழங்கப்படுவது இல்லை என வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.
மேலும் மீன் ஏற்றும் கூலர் வாகனங்களினால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.எனவே கூலர் உரிமையாளர்கள் வந்தவுடன் மன்னாரில் இருந்து உடனடியாக செல்வது சாத்தியமானது.
அவ்வாறு அவர்கள் திரும்பிச் செல்லாத சந்தர்ப்பத்தில் அவர்களை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்திய அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.
பாதுகாப்பு தரப்பினரிடம் நான் கலந்துரையாடிய பின்னரே நான் அதற்கான முடிவுகளை கூற முடியும்.எனவே வருகின்றவர்கள் உடனடியாக மாவட்டத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டும்.
மாவட்டத்தை விட்டு இங்கு வருகின்ற எவருக்கும் இங்கு பாஸ் வழங்கப்படுவது இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட விவசாய உற்பத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. எமது மாவட்டத்தை பொறுத்த வரையில் சிறுபோகத்தில் விதைக்கப்படுகின்ற நெல் மற்றும் சிறு தானியங்கள் இவை அனைத்தும் 6 ஆயிரத்து 860 ஏக்கரில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதில் 2606 ஏக்கரில் சிறு தானியச் செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ஏனையவை நெற்செய்கைக்கு பயன்படுத்தப்படும்.
அந்த வகையில் சிறிய குளம், நடுத்தர குளம்,பெரிய குளங்கள் ஆகியவை இணைந்து சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நெற் செய்கைக்கும் 2606 ஏக்கர் சிறு தானிய செய்கைக்கு பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
தற்போது சுமார் 582 ஏக்கருக்கான செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுநடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றிற்கு தேவையான உரம் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி செயலத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்.
தற்போது 887 மெற்றிக் தொன் உரம் தற்போது தேவையாக உள்ளது.எதிர்வரும் 30 ஆம்திகதி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|