மத்திய வங்கி மோசடிவிவகாரம் – இரண்டு நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிப்பு!

மத்திய வங்கி பினைமுறி மோசடி குறித்து விசாரணை செய்ய இரு நீதிமன்ற தீர்ப்பாயத்தை அமைக்க பிரதம நீதியரசர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்பதாக சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய 2016 மார்ச் மாதம் இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்குகள் குறித்து நீதிமன்ற தீர்ப்பாயத்தில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டி.தொடவத்த, எம். இரஸதீன் மற்றும் மஞ்சுள திலகரட்ன ஆகியோர் அடங்கிய ஒரு நீதிமன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இரண்டாவது நீதிமன்ற தீர்ப்பாய நீதிபதிகள் குழாமில் மேல் நீதிமன்ற நீதியரசர் அமல் ரணராஜா, பலல்லே மற்றும் ஆதித்ய படபந்திகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது.
Related posts:
வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விசேட பயிற்சி!
42 படகுகளை விடுவிக்க தீர்மானம்
புகையிரத நிலையங்களை அண்டிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.
|
|
ஊரடங்கு உத்தரவை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது இலங்கை – சுகாதார சேவ...
தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காக புதிய பொறிமுற...
21 ஆம் திகதிமுதல் ஒரு நீண்ட கால திட்டம் நடைமுறை - அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொரு...