மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை 08ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக உத்தரவு

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் மார்ச் மாதம் 08ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு கேட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 02ம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுவிட்ஸர்லாந்தில் இலங்கை தமிழர் படுகொலை!
கடும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள் - தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் சீ...
|
|