மதுபான போத்தல்களுக்கு இன்றுமுதல் பாதுகாப்பு ஸ்டிக்கர் நடைமுறைக்கு அமுல் – மதுவரி திணைக்களம் தகவல்!
Monday, January 3rd, 2022
உள்நாட்டில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மதுபான போத்தல்களுக்கும் இன்று திங்கட்கிழமைமுதல் புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர் ஓட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறித்த ஸ்டிக்கர் மதுபான போத்தல்கள் மற்றும் கொள்கலன்களில் ஒட்டப்படும் என்றும் மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகவே பழைய மதுபான போத்தல்களை விற்பனை செய்து நிறைவு செய்வதற்கு எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது.
அதன் பின்னர் விற்பனை செய்யப்படும் சகல மதுபான போத்தல்களிலும் புதிய முத்திரைகள் காணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விதிகளை மீறும் சாரதிகளுக்கான தண்டப்பணம் தொடர்பாக கவனம் செலுத்த முடிவு!
இலங்கை விடயம் தொடர்பில் எதனையும் வெளிப்படுத்தாத செய்ட் அல் ஹூசேன்!
மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிகிறது - ஈ.பி.டிபியின் வன்னி மாவ...
|
|
|


