மண்ணுக்குள்ளிருந்து வெளிவந்த மர்மப்பொருட்கள்!
Tuesday, March 29th, 2016நல்லூர்ப் பகுதியில் கிணறு வெட்டும்போது மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப்பொருட்கள் எடுத்துள்ளதாகவும் மேலும் ஒரு மர்மப்பொருள் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் –
மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப்பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளது எனவும் மேலும் ஒரு மர்மப்பொருள் இன்னமும் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பகுதிக்குச் சென்ற யாழ் பொலிஸார் அதனை பார்வையிட்டதுடன், விசேட அதிரடிப்படையினரிடம் குறித்த மர்மப் பொருட்களை ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
விவசாயிகளுக்கான முதல் கட்ட இழப்பீடு வங்கிக் கணக்குகளில் வைப்பீடு!
2020 நாடாளுமன்ற தேர்தல் : சானிடைசருக்கான செலவு ஒரு கோடியை தாண்டுகிறது -மஹிந்த தேசப்பிரிய!
போக்குவரத்து விதி மீறல் அதிகரிப்பு - நாட்டில் 13 அஞ்சலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்!
|
|