மண்டூஸ் சூறாவளியின் எதிரொலி- இருவர் பலி – நாட்டில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
Friday, December 9th, 2022
மண்டூஸ் சூறாவளி காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக குறைந்தது 2 பேர் இறந்துள்ளனர், 9 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 4,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலைய அறிக்கையின்படி, மோசமான வானிலை காரணமாக 1302 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சுமார் 58 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0000
Related posts:
ரியோ ஒலிம்பிக் 2016 இன் பிரம்மாண்ட வைபவத்தின் புகைப்படத் தொகுப்பு!
இந்தியாவை பின் தள்ளியது இலங்கை!
இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் உச்சத்தை நெருங்கவில்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ச...
|
|
|


