மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையில் மாற்றம் – புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக தலைவர் தெரிவிப்பு!

மண், மணல் மற்றும் கல் ஆகியவற்றை அகழ்வதற்கும் கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் ஒரே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுமென புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு வருகைதந்து, சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென அதன் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.
இதேநேரம் நாடளாவிய ரீதியிலுள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் கிளை அலுவலகங்களில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கல் வீசுவோர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தத் முடிவு!
அர்ஜூன மகேந்திரன், அஜான் இன்றி முறிகள் மோசடி விசாரணையை தொடரவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு!
சீரற்ற காலநிலை 10 ஆம் திகதி வரையில் நீடிக்கும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆணையாளர் தெர...
|
|