மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதே அரசின் நிலைப்பாடு: நாமல் ராஜபக்ஸ!
Friday, April 9th, 2021
மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சதொச ஊடாக மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுவதாக நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
தேங்காய் எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் மூலம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால், அதனைத் தடுக்க அரசாங்கம் தலையிடும் என அவர் கூறினார்.
சட்டத்தை மீறுவோர் மீது தராதரம் பாராமல் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
Related posts:
நெடுந்தீவு பிரதேசசபை விசாரணை முடக்கம்!
சுகாதாரச் சீர்கேடு: யாழ்ப்பாணத்தில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது வழக்கு!
புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்தவாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் விஜேய...
|
|
|


