மக்களின் வறுமையை விலைபேச நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் – ஈ.பி.டி.பியின் வடமராட்சி அமைப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன்
Monday, March 28th, 2016
நல்லாட்சியை கொண்டுவந்தோம் என சந்தி சந்தியாக கூவி வியாபாரம் செய்பவர்கள் தற்போது வறுமையில் வாடும் எமது வடக்கு கிழக்கு மக்களது வறுமையை வியாபாரமாக்கி விலை பேசுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இத்தகைய நிலைமையை மாற்ற மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் வடமராட்சி அமைப்பாளருமாகிய ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தொண்டமானாறு – கெருடாவில் தெற்கு அம்பிகை முன்பள்ளியின் விளையாட்டுப்போட்டி நேற்று (27) பிற்பகல் 3 மணியளவில் அம்பிகை சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க தலைவர் இ.குணசேகரம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த அரசில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்த போது இந்திய அரசுடன் பேசி 50 ஆயிரம் வீடுகளை பெற்று மக்களுக்கு கொடுக்க வழிவகை செய்திருந்தார்;. அவ்வீடுகள் தரமானதாகவும் பாரம்பரிய முறையில் எமது கலாசாரத்திற்கும் ஏற்றதாகவே இருந்தது. தற்போது 21 லட்சம் பெறுமதியான வீடுகள் எனக்கூறி தரமற்ற பிளாஸ்ரிக் கலவையிலான 65 ஆயிரம் வீடுகளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு வீட்டுக்கட்சியினர் முண்டு கொடுத்து வருகின்றனர்.

தற்போது நல்லாட்சி என சந்தி சந்தியாக கூவி வியாபாரம் செய்பவர்கள் மக்கள் மீது திணிக்கப்படும் இம்மோசடியான செயற்பாட்டிற்கு மத்திய எதிர்க்கட்சித் தலைவரோ அன்றி குழுக்களின் பிரதித்தலைவரோ மௌனம் சாதித்து மக்கள் மீதான இத்திணிப்பிற்கு ஒத்துழைத்து வருகின்றனர். வழங்கப்படுவதற்காக தயாராகும் 65 ஆயிரம் வீடுகளும் தரமற்ற எமது பாரம்பரியத்திற்கு ஒவ்வாத வீடுகளாகவே உருவாக்கப்பட்டு எமது மக்களுக்கு திணிக்க முயற்சி செய்கின்றனர்.
நாம் பாரம்பரியமாக எமது பாட்டனார் பேரனார் கட்டிய வீடுகளில் வம்சம் வம்சமாக வாழும் கலாசாரப் பண்பாடு கொண்டவர்கள். ஆனால் பத்து ஆண்டுகள் கூட காலநிலைக்கு தாக்குப் பிடிக்காத வீடுகளை எமது மக்கள் திணிப்பதை தடுக்க மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டும் என்பதுடன் எமது மக்களின் வறுமையை விலைபேச நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

Related posts:
|
|
|


