மக்களின் பிரச்சினைகளை அமைச்சர்கள் நேரடியாக சென்று தீர்க்க வேண்டும் – ஜனாதிபதி!

தமது கடமைகளில் பெரும்பாலான நேரத்தை தாம் போராட்டங்களுக்கு தீர்வு காணும் விடயங்களில் செலவழிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதன்போது அமைச்சர்களிடம் கோரிக்கையொன்றையும் ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
அதன்படி, மக்களின் பிரச்சினைகளை அமைச்சர்கள் நேரடியாக சென்று தீர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்வில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு.!
வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் இந்தியாவில் கைது!
கடந்த ஆண்டு இலங்கைக்கு மில்லியன் டொலருக்கும் அதிகமான புதிய உதவிகளை அமெரிக்கா வழங்கியதாக இலங்கைக்கான ...
|
|