மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – நிலைப்பாட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிகவும் உறுதியாகவே உள்ளது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கன் தெரிவிப்பு!

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற அமைச்சரின் மகுட வாசகத்தக்கேற்ப வலிகாமம் வடக்க உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பலாலி பகுதி அரச நிலங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கு முதற்கட்மாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிவாகச் செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (08.09.2023) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்ட ஶ்ரீரங்கேஸ்வரன் மேலும் கூறுகையில் –
வலிகாமம் வடக்கிலிருந்து 1990 களில் வெளியேற்றப்பட்டு நீண்ட காலமாக நிரந்தர வாழிடங்களின்றி இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி வடக்கை பூர்வீகமாக கொண்ட குறிப்பாக பலாலியைச் சேர்ந்த 49 குடும்பங்களுக்கு தலா ஒன்றரை பரப்பு வீதம் காணிகள் கடந்த 5 ஆம் திகதியன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.
இவ்வாறாக அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் படிப்படியாக விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற நிலைப்பாட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிகவும் உறுதியாகவே உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக குறித்த பிரதேசம் உயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்து வந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கடந்த பெப்ரவரி மாதமளவில் விடுவிக்கப்பட்டிருத்ததுடன், விடுவிக்கப்பட்ட அரச காணிகளை முகாம்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளும் அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|