மக்களின் காணி உரித்துரிமையை எவராலும் தடுக்க முடியாது – பிரதமர்!

மக்களின் காணிகளுக்கான முழு உரித்துரிமை வழங்குவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
சில நிறுவனங்கள் இந்த பணிகளை தடுக்க முயன்று வருகின்றன. நேற்று அம்பாறையில் இடம்பெற்ற, பத்து இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை கையளிக்கும் உத்தியோகபூர்வ தேசிய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் இந்த செயற்றிடத்தின் மூலம் மிகுந்த நன்மை அடைவார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த செயற்றிட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த செயற்றிட்டம் உரிய இலக்குகளை விரைவாக அடைகிறது என்று அந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். மக்கள் இப்பொழுது தமது காணி உறுதிப்பத்திரங்களை வைத்து கடன் வசதிகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
Related posts:
|
|