ப.நோ.கூட்டுறவுச் சங்கங்களுக்கு தீர்வை விலக்களிக்கப்பட்ட பாரவூர்திகள் பெற்றுக்கொடுக்கத்திட்டம்!

Friday, November 4th, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சினால் வடக்கு மாகாணம் உட்பட நாடு தழுவிய ரீதியில் உள்ள ப.நோ.கூட்டுறவுச் சங்கங்களுக்கு தீர்வை விலக்களிக்கப்பட்டு பாரவூர்திகளைப் பெற்றுக்கொடுக்கும் திட்டம் (2017 – 2016) இரண்டு வருடங்களுக்கு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தீர்வை விலக்களிக்கப்பட்ட பாரவூர்திகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் ப.நோ.கூட்டு;றவுச் சங்கங்கள் தங்கள் பகுதி மாவட்ட கூட்டுறவு ஆணையாளருடன் தொடர்பு கொள்ளுமாறு கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது:

கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சினால் தீர்வை அற்ற பாரவூர்தி பெற்றுக் கொள்வது தொடர்பாக கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய இதுவரை 158 ப.நோ.கூட்டு;றவுச் சங்கங்கள் மட்டுமே பாரவூர்தியைப் பெற்றுக்கொள்வதற்கான வேண்டுகோளை முன்வைத்துள்ளன. இதுவரை 2017ஆம் ஆண்டு 83 சங்கங்களுக்கு தீர்வையற்ற பாரவூர்திகள் கையளிக்கப்பட்டுள்ளதாக இத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

lorry-8564

Related posts: