பௌத்த மத சிந்தனைக்கு ஏற்ப முடிவுகளை இந்த நாட்டின் தலைவர்கள் எடுக்க வேண்டும் – பேராயர் மால்கம் ரஞ்சித் ஆண்டகை!

Friday, January 1st, 2021

பௌத்த தேரர்களிம் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த நாட்டின் தலைவர்கள் பௌத்த மத சிந்தனைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(31) களுத்துரையில் நடந்த ஒரு மத விழாவில் உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

பௌத்த தர்மம் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு ஆசீர்வாதமாக நான் பார்க்கிறேன். பண்டைகாலம் முதல் இந்த நாட்டை ஆண்ட மன்னர்கள் பௌத்த மதத்திற்கு பழங்காலத்திலிருந்தே காட்டிய அன்பு, தயவு மற்றும் நெருக்கம் ஆகியவற்றை நாடு முழுவதும் காணலாம்.

இந்த நாட்டை சிங்கள மற்றும் பௌத்த மரபுகள் நிறைந்த ஒரு வலுவான நாடாகவே நான் பார்க்கிறேன். எனவே, இது ஒரு பௌத்த நாடு அல்ல என்று யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொல்பவர்கள் முட்டாள்.

இந்த நாட்டிற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு பௌத்த மதம் என்பதை நம் நாட்டின் அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அதைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.

நமது மஹா சங்கத்தினரிப் அறிவுரைகளை நாம் ஏற்றுக் கொண்டு இந்த பார்வையின் மூலம் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.

இந்த நாட்டில் தலைவர்களாக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பௌத்த மத சிந்தனைக்கு ஏற்ப இருக்க வேண்டும். பௌத்த சிந்தனைக்கு பொருந்தாத முடிவுகளை எடுப்பது நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: