போலி காப்புறுதி முகவர்கள் தொடர்பில் விசாரணைகள் வேண்டும் – கோப் குழு வலியுறுத்து!
 Wednesday, March 15th, 2023
        
                    Wednesday, March 15th, 2023
            
2009 ஆம் ஆண்டு போலி காப்புறுதி முகவர்கள் குறித்து குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அதன் தற்போதைய நிலை என்வென்பதை விசாரிக்குமாறு பொது நிறுவனங்களுக்கான கோப் குழு இலங்கை காப்புறுதி நிறுவனத்திடம் கோரியுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து குற்றப்புலனாய்வுத்துறையிடம் கேட்குமாறு கோப் தலைவர் ரஞ்சித் பண்டார இலங்கை காப்புறுதி நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாடு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் மாலைதீவு மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் பெரும் நிதி இழப்பைச் சந்தித்த இரண்டு கிளைகள் மூடப்பட முடிவெடுக்கப்பட்டபோதும் இன்னும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே அது குறித்து கண்காணிப்பை மேற்கொள்ள கோப் குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        