போலிச்செய்திகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான விசேட நடவடிக்கைகள் – அமைச்சர் சரத்வீரசேகர தெரிவிப்பு!

Friday, April 16th, 2021

சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் போலிச் செய்திகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான விசேட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அதனூடாக பொதுமக்களின் கருத்து சுதந்திரம் முடக்கப்படாது  எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய சட்டங்களில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு மாத்திரம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து சுதந்திரம் அரசமைப்பில் உள்ள அடிப்படை சுதந்திரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர், கருத்து சுதந்திரம் ஜனநாயக நாடுகளில் தாரளவாத மயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையிலும் இதேநிலை காணப்படுகின்றது  என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கருத்துசுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் சூழலிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கின்றது போன்ற போலிச் செய்திகள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னமும் நிருபிக்கப்படவில்லை. அரசாங்கம் சூழலை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைளை எடுத்துள்ளது எனவும் அரமச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கிராம அலுவலர்களுக்கான பிரதேச செயலக மட்ட, மாவட்ட மட்ட இடமாற்றங்களுக்கான விண்ணப்பம் கோரல்!
இலங்கை இராணுவத்தின் தியாகபூர்வமான பங்களிப்பை புகழுரை வார்த்தைகளுக்குள் அடக்கிவிடப்பட முடியாது – வாழ்...
நாட்டின் சவாலான சந்தர்ப்பங்களில் தேசிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்தது ம...