போராட்டங்களின் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன – அமைச்சர் சாகல ரட்நாயக்க!
Wednesday, February 8th, 2017
போராட்டங்களின் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் நடத்தும் போராட்டங்களினால் பொதுமக்கள் உரிமைகள் மீறப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சட்டம் ஒழுங்கு மதிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சட்டம் ஒழுங்கையும் நல்லாட்சியையும் நிலைநாட்டுவதில் அதிக கரிசனை கொண்டுள்ளதாக பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
போராட்டங்களை நடாத்துவதற்கு தனியான இடமொன்று ஒதுக்கப்பட வேண்டுமெனவும் போராட்டங்கள் நடத்தப்படுவதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சாகல ரட்நாயக்க மேற்கண்ட கருத்தை வெளியிட்டிருந்தார்.

Related posts:
தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் நிறைவு!
அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று ஆரம்பம் - வழிமுறைகள் தொடர்பில் துணைவேந்தர்களுக்கு அறிவித்தப்பட்டுள்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் விவகாரம் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!
|
|
|


