போதைப்பொருள் குற்றவாளிகளில் முதன்மை வகிப்பவர்கள் பெண்களே – அமைச்சர் தலதா அத்துக்கோரள!

நாட்டில் போதைப் பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ளோரின் பட்டியலில் முதன்மை வகிப்பது பெண்களே என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
நாம் நாட்டைப் பொறுப்பேற்கையில், இலங்கையில் போதைப் பொருட்களை சட்டவிரோதமாக கொண்டுவரும் கேந்திர நிலையமாக இருந்தது எனக் குறிப்பிட்ட அமைச்சர், இந்நிலையை மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்நாட்டில் அதிகமாக போதைப் பொருட்களை கொண்டு செல்வது பெண்கள் என்பதை அறியும்போது நாம் கவலையடைய வேண்டியுள்ளது.
சிறைச்சாலைக்கு போய் வந்தால் வாழ்க்கையே வேண்டாம் என்கின்ற நிலை உருவாகும். தற்போது மரண தண்டணையை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதற்கான பெயர் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் முதலாவது பெயரே ஒரு பெண்ணுடையது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அரசாங்கம் என்ற வகையில் நாம் மக்களின் தேவைகளை நிறைவேற்ற கடமைபட்டுள்ளோம்.என்றாலும் சில அதிகாரிகளுக்கு தமது கடமையின்போது அரசியல் செய்வதனை நிறுத்த முடியாமல் போயுள்ளது. அரசாங்க சேவையென்பது ஐ.தே.க வோ அல்லது சு.கவோ அல்ல. அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமைகளுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
|
|