போக்குவரத்து தொடர்பில் விரைவில் புதிய நடைமுறை !
Friday, February 3rd, 2017
எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதியில் இருந்து பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அனைத்து சாரதிகளும், பயணிகள் போக்குவரத்து சான்றிதழ் வைத்திருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மோட்டார் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் 17000 சாரதிகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். சாரதிகளிடம் உள்ள சாரதி அனுமதி பத்திரம் மற்றும் ஏனைய கடிதங்களுக்கு மேலதிகமாக இந்த சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து இரண்டு நாட்கள் இதற்காக பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் இந்த சான்றிதழ் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:
|
|
|


